NERVIZHI NEWS - DO NOT COPY
Nervizhi News Network
காத்திருக்கவும்...
நேரலை (LIVE)
Translate / மொழிமாற்றம் / පරිවර්තනය
முக்கிய செய்திகள்
+++ இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய நேரடித் தொகுப்புச் செய்திகள் உடனுக்குடன்.. +++
நெர்விழி நியூஸ் - எங்களின் சமூக ஊடகப் பக்கங்கள்

🌙 இன்றைய இரவு நேர செய்திகள் | செவ்வாய்க்கிழமை, 09 ஜூன் 2026

 

🔴 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் திருப்தியளிக்கின்றன


2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் அரசியல் தலையீடுகளின்றி சுயாதீனமாக முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என பல்வேறு தரப்புகள் தெரிவித்துள்ளன.


278 அப்பாவி உயிர்களை காவுகொண்ட இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவுகிறது. இந்த விசாரணைகள் உண்மையை வெளிக்கொணர்ந்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


---


🚭 தடை செய்யப்பட்ட மின் சிகரெட்டுகள் சந்தையில் தொடரும் விற்பனை


இலங்கையில் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட மின் சிகரெட்டுகள் மற்றும் புகையற்ற புகையிலைப் பொருட்கள் இன்னும் சந்தையில் எளிதாகக் கிடைப்பதாக புதிய ஆய்வொன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.


புகையிலை தொழில்துறை அவதான நிலையம் மற்றும் சுகாதாரத்திற்கான இளம் தொழில்முறை வல்லுநர்கள் கூட்டமைப்பு இணைந்து மேற்கொண்ட ஆய்வில், 2016 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைகளின் கீழ் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் இப்பொருட்கள் விற்பனையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


---


🔥 “கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் நான் தீ வைத்துக்கொள்வேன்” – உதய கம்மன்பில


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தாம் தீக்குளிப்பேன் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


---


⚫ கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு


கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் கிளிநொச்சி நகரைச் சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


---


⚖️ சரண குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை


முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறிந்த கொழும்பு உயர் நீதிமன்றம், அவருக்கு மொத்தமாக 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.


அவர் மீது சுமத்தப்பட்டிருந்த நான்கு தனித்தனி குற்றச்சாட்டுகளுக்காக தலா நான்கு ஆண்டுகள் வீதம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


---


🎓 கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் கல்விக் கண்காட்சி


கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் இருமொழிக் கல்வி பயிலும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்விக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.


கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களை மையப்படுத்தி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ச.இ. ரெஜினோல்ட் FSC தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்வி வலய இருமொழிப் பிரிவு இணைப்பாளர் திருமதி சு. திருஞானசம்பந்தர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


---


📌 அரசியல், நீதிமன்றம், சமூக விடயங்கள், கல்வி மற்றும் உடனடி செய்திகள் அனைத்தையும் துல்லியமாக அறிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.


Nervizhi News Network


உண்மையை நோக்கி... மக்களின் குரலாக...

பார்வையாளர்கள்: ...
PK.JUTHAN
News 🗞️ reporter PK .JUTHAN
Sri Lanka, Batticaloa, Kokkadichcholai