NERVIZHI NEWS - DO NOT COPY
Nervizhi News Network
காத்திருக்கவும்...
நேரலை (LIVE)
Translate / மொழிமாற்றம் / පරිවර්තනය
முக்கிய செய்திகள்
+++ இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய நேரடித் தொகுப்புச் செய்திகள் உடனுக்குடன்.. +++
நெர்விழி நியூஸ் - எங்களின் சமூக ஊடகப் பக்கங்கள்

இன்றைய இரவு செய்திகள் | 11.06.2026 | வியாழக்கிழமை


 

🔴 "2010 ஜனாதிபதி தேர்தலின்போது வவுனியாவில் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன. அப்போது சுரேஷ் சலே வவுனியாவில் இருந்தார்" என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

━━━━━━━━━━━━━━━

🌦️ 2016 வறட்சியை விட கடுமையான நிலை உருவாகுமா?

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

━━━━━━━━━━━━━━━

💰 ஒரே நாளில் ரூ.8,000 குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்க விலையில் இன்று திடீர் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

🔸 24 கரட் (1 பவுண்) – ரூ.370,000 🔸 22 கரட் (1 பவுண்) – ரூ.340,400

சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களே இந்த விலை வீழ்ச்சிக்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

━━━━━━━━━━━━━━━

🇱🇰🤝🇯🇵 ஜப்பானின் உதவியுடன் மீன்பிடித் துறைக்கு புதிய பலம்

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு ஜப்பான் அரசாங்கம் 6 அதிநவீன குளிரூட்டப்பட்ட லொறிகளை வழங்கியுள்ளது.

சுமார் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பனிக்கட்டி உற்பத்தி நிலையங்களும் நிறுவப்படவுள்ளன.

━━━━━━━━━━━━━━━

⛈️ தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி வரை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

⚠️ வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🌊 கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

━━━━━━━━━━━━━━━

🦟 டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கை தீவிரம்

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட 7 நாள் விசேட திட்டத்தின் போது 97,871 வளாகங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

📌 6,268 வளாகங்களில் டெங்கு நுளம்பு இளம்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. 📌 25,626 வளாகங்கள் ஆபத்தான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 📌 2,401 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

━━━━━━━━━━━━━━━

📌 உள்நாடு • அரசியல் • பொருளாதாரம் • வானிலை • சுகாதாரம் தொடர்பான முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிய தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.

பார்வையாளர்கள்: ...
PK.JUTHAN
News 🗞️ reporter PK .JUTHAN
Sri Lanka, Batticaloa, Kokkadichcholai