NERVIZHI NEWS - DO NOT COPY
Nervizhi News Network
காத்திருக்கவும்...
நேரலை (LIVE)
Translate / மொழிமாற்றம் / පරිවර්තනය
முக்கிய செய்திகள்
+++ இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய நேரடித் தொகுப்புச் செய்திகள் உடனுக்குடன்.. +++
நெர்விழி நியூஸ் - எங்களின் சமூக ஊடகப் பக்கங்கள்

🕛 இன்றைய மதிய நேர செய்திகள் | 12.06.2026


 🔴 சுற்றுலா அபிவிருத்தி நிதி வழக்கு: பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா அபிவிருத்தி நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔴 சுரேஷ் சலேவுக்கு ஆதரவான போராட்டம் எமது கட்சியின் நடவடிக்கை அல்ல – சஞ்சீவ எதிரிமான்ன

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் தங்களது கட்சியின் அரசியல் நடவடிக்கையோ அல்லது அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகவோ இல்லை என சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

🔴 ஹட்டனில் 6,000 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலையை லொறியொன்றில் ஏற்றி சென்ற சந்தேகநபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாப்பிட்டிய நோக்கி கொண்டு செல்லப்பட்ட குறித்த லொறி, ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது சட்டவிரோதமாக கழிவுத் தேயிலை கடத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியும், பறிமுதல் செய்யப்பட்ட கழிவுத் தேயிலையும், லொறியும் இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.

🏆 மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் மாத்தளை மாணவனுக்கு இரண்டாம் இடம்

மலேசியாவின் ஜென்டிங் நகரில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித (Abacus & Mental Arithmetic) போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மாத்தளை மாணவன் எஸ். லபிஷாசன் இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய அவர், தற்போது மாத்தளையில் உள்ள ஹார்வர்ட் சர்வதேச பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

🌡️ பசிபிக்கில் உருவாகும் வெப்ப அலை: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் கடல் நீர் வழமையை விட அதிகமாக வெப்பமடைந்து வருவது El Niño காலநிலை நிகழ்வின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இதன் தாக்கமாக இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பலவீனமடையக்கூடும் என்றும், இலங்கையில் அதிக வெப்பநிலை, வறட்சி, விவசாய விளைச்சல் குறைவு மற்றும் சில காலங்களில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

🟡 காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்: உழ்கிய்யா இறைச்சி தொடர்பில் விளக்கம்

காத்தான்குடி – 01 மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் இடைக்கால நிர்வாகம், பழுதடைந்ததாகக் கூறப்படும் உழ்கிய்யா இறைச்சி விநியோகம் தொடர்பில் விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில், 1,250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகிக்கப்பட்டதாகவும், மீதமிருந்த இறைச்சி நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு அமைய குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இறைச்சி பழுதடைந்தமை கண்டறியப்பட்டதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

⚽ 2026 FIFA உலகக் கோப்பை இன்று ஆரம்பம்

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று (12) அதிகாலை ஆரம்பமாகிறது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன. FIFA வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடராக இது அமைகிறது.

முதல் போட்டி மெக்ஸிகோ சிட்டியில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

📰 இன்றைய மதிய நேர செய்திகள் | 12.06.2026

📌 அரசியல் | குற்றச்செய்தி | கல்வி | காலநிலை | சமூகம் | விளையாட்டு

📲 மேலும் பல உடனடி செய்திகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.

பார்வையாளர்கள்: ...
PK.JUTHAN
News 🗞️ reporter PK .JUTHAN
Sri Lanka, Batticaloa, Kokkadichcholai