NERVIZHI NEWS - DO NOT COPY
Nervizhi News Network
காத்திருக்கவும்...
நேரலை (LIVE)
Translate / மொழிமாற்றம் / පරිවර්තනය
முக்கிய செய்திகள்
+++ இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய நேரடித் தொகுப்புச் செய்திகள் உடனுக்குடன்.. +++
நெர்விழி நியூஸ் - எங்களின் சமூக ஊடகப் பக்கங்கள்

📰 இன்றைய காலை நேர செய்திகள் | 13.06.2026 🚨 PHI அதிகாரிகள் போல நடித்து வர்த்தகர்களிடம் பணம் பறித்த கும்பல்!

அநுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல, தலாவ மற்றும் தம்புத்தேகம பகுதிகளில் வர்த்தக நிலையங்களை குறிவைத்து, பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) எனக் கூறி பணம் பறித்த ஆள்மாறாட்டக் கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகளின் சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்து கடைகளுக்குள் நுழைந்த இந்தக் கும்பல், சிறிய குறைபாடுகளை சுட்டிக்காட்டி, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தி பணம் வசூலித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தகர்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர்கள் அணிந்திருந்த ஆடைகள் உண்மையான PHI சீருடைகள் அல்ல என்பதும், அவை மலேரியா கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்களின் சீருடையை ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

⚖️ கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்ற வர்த்தகருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

கொழும்பு 12, பழைய சோனகத் தெருவில் அமைந்துள்ள சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில் கீரி சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில், வர்த்தகர் ஒருவருக்கு ரூ.500,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினரின் சோதனையில், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி ரூ.260 என்ற அரசாங்க நிர்ணய விலைக்கு பதிலாக ரூ.340க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

💧 கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்கு நீர் குளிரூட்டி இயந்திரங்கள் அன்பளிப்பு

கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்கு Qatar Charity நிறுவனத்தின் அனுசரணையில் இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்லூரியின் விசேட கல்விப் பிரிவில் நடைபெற்ற நிகழ்வில், அதிபர் எம்.ஐ. அப்துல் றஸாக் தலைமையில் இவ்வன்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் Qatar Charity நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த உதவி கல்வி சமூகத்தினரால் பாராட்டப்பட்டுள்ளது.

✈️ பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாவது பயணிகள் முனையப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தின் (Terminal 2) கட்டுமானப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இத்திட்டம், புதிய திட்டமிடலின் கீழ் மீண்டும் செயல்படுத்தப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🌐 NERVIZHI NEWS

உண்மையை நேராக உங்களிடம் கொண்டு வரும் நம்பிக்கைக்குரிய செய்தித் தளம்

பார்வையாளர்கள்: ...
PK.JUTHAN
News 🗞️ reporter PK .JUTHAN
Sri Lanka, Batticaloa, Kokkadichcholai