புத்தளம் – நுரைச்சோலை தலுவா முகத்துவாரப் பகுதியில் ஏற்பட்ட துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கடுமையான கடல் நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞரும் ஆவர். இவர்கள் புத்தளம் தில்லையடி மற்றும் உமராபாத் பகுதிகளைச் சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான காலநிலை மற்றும் ஆபத்தான நீரோட்டம் காரணமாக நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
💔 மகிழ்ச்சியாக தொடங்கிய ஒரு சுற்றுலா... மூன்று இளம் உயிர்களின் பிரிவால் சோகமாக முடிந்துள்ளது.
⚠️ பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை: தற்போது நிலவும் மழைக்கால மற்றும் பலத்த காற்று காரணமாக கடல், ஆறு மற்றும் முகத்துவாரப் பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. எச்சரிக்கை பலகைகள் உள்ள இடங்களில் நீராடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தினரின் மற்றும் நண்பர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.
🕊️ உயிரிழந்த மூவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
#புத்தளம் #நுரைச்சோலை #தலுவா #சுற்றுலா_சோகம் #BreakingNews #SriLankaNews #NervizhiNewsNetwork #RIP #SafetyFirst #TamilNews 🚨🖤
