🔴 "நாங்கள் குறைந்தது 25 வருடங்களாவது ஆட்சி செய்வோம்" – அமைச்சர் கே.டி. லால்காந்த
தற்போதைய அரசாங்கத்தின் இந்த ஐந்து வருட ஆட்சிக் காலம் நிறைவடையும் போது, விவசாயிகள் உட்பட நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மேலும் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சியைத் தொடரச் செய்வார்கள் என அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
🔴 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு பொய்யானது – அலி சப்ரி
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு அநீதியானதும், ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுமாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
🔴 வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்
நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் அச்சிடும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔴 மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரி விவகாரம்
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
